மோகமுள் (Mohamul)

By டி . ஜானகிராமன் (T. Janakiraman)

$17.00

Description

பாரதி’, ‘பெரியார்’ திரைப்படங்களை இயக்கிய ஞான ராஜாசேகரனின் ‘மோகமுள்’ திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது.

‘மோகமுள்’ளின் கதை வாழ்க்கையில் பழமையானது. அது எழுதப்பட்ட காலகட்டத்தில் இலக்கியத்துக்கு புதியது. முதிரா நாவலின் மையம். இந்த உறவுக்கு அன்றைய சமுக வாழ்க்கையில் மதிப்பில்லை. அது நாவலிலேயே குறிப்பாகச் சொல்லப்படுகிறது. பாபுவுக்கு யமுனாமீது ஏற்படும் ஈர்ப்புத் தெரிய வரும்போது அவர்களைச் சார்ந்தவர்கள், பாபுவின் தந்தை வைத்தி, நண்பன் ராஜம், யமுனாவின் தாய் பார்வதி, ஏன் யமுனாவேகூட அதை ஏற்கத் தயங்குகிறாள். இந்த உறவு மீறலை பதிவு செய்தது ஜானகிராமனின் கலைத்துணிவு. ஆனால் அதுமட்டுமே அல்ல நாவல். நாவலை மறுபடியும் வாசிக்கும் ஒவ்வொரு முறையும் அதன் நுண் தளங்கள் வெளிபடுகின்றன. காதலையும் காமத்தையும் முதன்முறையாகச் சொல்லும் நாவல் நூட்பமாக வேறு பரிமாணங்களையும் கொண்டிருக்கிறது. இசையும் உறவுகளும் காலமும் நாவலின் மறைமுக மையங்களாகின்றன. தந்தைக்கும் மகனுக்குமான உறவு (வைத்தி-பாபு), நண்பர்களுக்கிடையாலான தோழமை (ராஜம்- பாபு), சகோதர வாஞ்சை (சங்கு-பாபு), சங்கிதத் தேடல் (மராத்திய பாடகர்- பாபு), காமத்தின் அழைப்பு ( தங்கம்மா – பாபு). இந்த நுண் தளங்கள் ஒன்றுக்கொன்று பிணைந்து நிற்கின்றன. மேற்சொன்ன கிளைத் தளங்களிருந்து அணுகினால் ‘மோகமுள்’ இன்னொரு தோற்றத்தைக் கொள்ளக்கூடும்.

Additional information

Weight 100 oz
Language

Tamil

Reviews

There are no reviews yet.

Be the first to review “மோகமுள் (Mohamul)”

Your email address will not be published. Required fields are marked *