கர்நாடக சங்கீதம் ஓர் எளிய அறிமுகம் (Karnataka Sangeetham Oru eliyea Arimugam)

By மகாதேவன் ரமேஷ் (Mahadevan Ramesh)

$7.00

Description

கர்நாடக இசை மீதான காதல் உலகம் முழுவதும் படர்ந்து பெருகிக்கொண்டிருக்கும் சமயம் இது. ஆயிரக்கணக்கான புது ரசிகர்கள் இந்த இசை உலகத்துக்குள் அனுதினமும் பிரவேசித்துக்கொண்டிருக்கிறார்கள். கற்றும், கேட்டும் இன்புறுகிறார்கள். அதே சமயம், கர்நாடக இசையின் அடிப்படைகள் தெரியாததால், அதன் இன்பத்தை முழுமையாக உணரமுடியவில்லை. அந்தக் குறையைப் போக்குகிறது இந்தப் புத்தகம். கர்நாடக இசையின் அடிப்படைகளில் இருந்து தொடங்கும் இந்தப் புத்தகம் படிப்படியாக இசை சமுத்திரத்தின் முக்கிய அம்சங்களை எளிமையாகவும் இனிமையாகவும் அறிமுகம் செய்துவைக்கிறது. பரவலான புரிதலுக்காக, மேற்கத்திய கீபோர்டின் அடிப்படைகள் வாயிலாக கர்நாடக இசை அறிமுகம் செய்யப்படுகிறது. ராகத்தையும் தாளத்தையும் புரியவைக்க எளிய உதாரணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த அடிப்படைகளை முழுமையாக உள்வாங்கிக்கொண்டு ரசிக்கும்போது, உங்கள் ரசனை இன்பம் பன்மடங்கு பெருகிப்போவதை உணர்வீர்கள். நூலாசிரியர் Dr. மகாதேவன் ரமேஷ், ஐ.ஐ.டி. கான்பூரில் படித்தவர். ஓஹாயோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி பட்டம் பெற்றவர். தற்சமயம் சென்னையில் பொறியியல் மற்றும் நிர்வாகவியல் ஆலோசகராகவும், நிர்வாகவியல் பேராசிரியராகவும் பணிபுரிகிறார்.