$17.00
Genre
Novels & Short Stories
Print Length
160 pages
Language
Tamil
Publisher
Kalachuvadu Publications
Publication date
1 January 2009
ISBN
9789384641016
Weight
440 Gram
சில நேரங்களில் சில மனிதர்கள் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். ஜெயகாந்தனின், "அக்னி பிரவேசம்" என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும்.கதையின் ஆரம்பத்திலேயே கங்காவின் பாத்திரத்தை பற்றிய மிகப்பெரிய எதிர்பார்ப்பை நம்முள் ஏற்படுத்தி, கதையை கனகச்சிதமாக நடத்திச் செல்கிறார் ஜெயகாந்தன். எனவே நாவலின் முதல் 75 பக்கங்களை மிக விரைவாகப் படித்து முடித்தேன். இப்பக்கங்களில் அக்கனிப் பிரவேசம் என்ற கதையின் முடிவைப் பற்றி கங்கா, கனகம், வெங்கு ஆகியோரின் பார்வையில் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறார் ஜெயகாந்தன். மூன்றுவிதமான பார்வைக் கோணத்தை காட்டி, படிப்போர் மனதில் பல்வேறு கேள்விகளை ஜெயகாந்தன் எழச்செய்கிறார். அந்தக் கதையை கங்கா தன்னுடைய அம்மாவை படிக்கும்படி செய்வதும், அதைப் படித்த கனகம் புலம்புவதும் நம் மனதைக் கரைக்கிறது. கடந்த காலத்தில் வாழ்க்கையில் நடந்து முடிந்துவிட்ட பல சம்பவங்களை ஒரு சிறு சொல் அல்லது செயலால் மாற்றியமைத்திருக்க முடியும் என்பதை இன்று நிகழும் காலத்தில் அறியும்போது பாதிக்கப்பட்ட மனதில் ஏற்படும் தவிப்பும், அங்கலாய்ப்பும், ஆற்றாமையும் சொல்லொண்ணாதது.
0
out of 5