$15.00
Genre
Novels & Short Stories
Print Length
192 pages
Language
Tamil
Publisher
Kalachuvadu Publications
Publication date
1 January 2010
ISBN
9789380240220
Weight
350 Gram
நவீனத் தமிழ்ச் சிறுகதையில் மௌனி ஒரு தனிநபர் இயக்கம். அவர் கதைகளில் சொல் புதிது; பொருள் புதிது; அவர் சமைத்த உலகமும் புதிது. மௌனியின் எழுத்துக்களுக்கு முன்னோடியும் வாரிசும் அவர் மட்டுமே. இந்தத் தன்மையை இனங்கண்டுதான் அவரைச் 'சிறுகதையின் திருமூலர்' எனப் புதுமைப்பித்தன் வியந்தார். தமிழின் முன்னோடிச் சிறுகதையாளர்கள் மனித மனத்தின் மையத்திலிருந்து வெளியுலகை நோக்கி நகர்ந்தபோது, மௌனி உள் உலகின் விளிம்புகளுக்குள் பயணம் செய்தார். மனத்தின் இருள், விநோதம், தத்தளிப்பு, குதூகலம் போன்ற வழிகளில் நிகழ்ந்த பயணங்கள்தாம் மௌனியின் பெரும் பான்மையான கதைகளும். சுருங்க எழுதிப் பெரும்புகழ் பெற்றவர் மௌனி. அவர் மொத்தம் எழுதியவை 24 கதைகள், 2 கட்டுரைகள். மௌனியின் மொத்த ஆக்கங்களையும் உள்ளடக்கியது இந்நூல்.
0
out of 5