$12.00
Genre
Novels & Short Stories
Print Length
112 pages
Language
Tamil
Publisher
Kalachuvadu Publications
Publication date
1 January 2009
ISBN
9789382033189
Weight
200 Gram
வெகுகாலமாக செவிவழிச் செய்திகளாலும் அச்சேறிய தரவுகளாலும் மட்டுமே புனையப்பட்டிருந்த தமிழ் சினிமா வரலாற்றை ஆய்வியல் பண்புகளுடன் வருங்கால சந்ததியினர் பயன்பெறும் வகையில் உருவாக்கியவர் தியடோர் பாஸ்கரன். ஒரு வரலாற்றாளராக பாரபட்சம் ஏதுமின்றி எவ்வகைப் படமாக இருந்தாலும் அதன் சான்றுகளை ஒழுங்குபடுத்துகிற அதே சமயத்தில், சினிமா மொழியை உணர்த்தும் படைப்புகளையே உன்னதமாகக் கருதும் கறாரான விமர்சகராகவும் செயல்பட்டு வருகிறார். முழுமையான சினிமா பார்வையின் இவ்விரு போக்குகளையும் இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் காணலாம். தமிழ்த் திரையில் காட்டுயிர், தமிழ்த் திரையியல் ஆய்வுக்கு மேலை ஆய்வாளர்களின் பங்கு, தென்னிந்திய சினிமாவின் தொழிற்சங்க இயக்கம் போன்ற முன்னோடித்தன்மை கொண்ட ஆய்வுகளுடன் தியடோர் பாஸ்கரனுடனான நேர்காணலும் இந்நூலின் சிறப்பம்சங்கள்.
0
out of 5