$8.92
Genre
Print Length
276 pages
Language
Tamil
Publisher
Manjul Publication
Publication date
1 January 2024
ISBN
9789355434678
Weight
0.79 Pound
வாழ்க்கையைப் பற்றி ஆழமாகச் சிந்திப்பதற்கும் அலசுவதற்கும் நம்மைத் தூண்டுகின்ற இந்நூல், உத்வேகமூட்டும் இலக்கியப் படைப்பான ‘ரசவாதி’ நூலுக்கு ஓர் இன்றியமையாத துணை நூலாகும். நம்முடைய காலகட்டத்தின் மாபெரும் எழுத்தாளர்களில் ஒருவரிடமிருந்து வந்துள்ள இத்தொகுப்பு, மனித நிலையின் மர்மங்களைத் திரைவிலக்குகிறது. ‘அது எழுதப்பட்டுள்ளது’ என்ற பொருள் கொண்ட ‘மக்தூப்’ என்ற பெயரில் ஒரு நாளேட்டில் பாலோ கொயலோ எழுதிய தினசரிப் பத்தியிலிருந்து சேகரிக்கப்பட்டுள்ள இக்கதைகள், இறைநம்பிக்கை, சுய அலசல், பரிபூரண மாற்றம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பயணத்தில் கலந்து கொள்ள, ஆன்மிக உண்மைகளைத் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. பாலோ கொயலோ விளக்குவதுபோல, “ ‘மக்தூப்’, அறிவுரைகள் வழங்குகின்ற ஒரு நூல் அல்ல, மாறாக, அது அனுபவங்களின் ஒரு பரிமாற்றமாகும்.” ஒவ்வொரு கதையும், பொதுவாக வாழ்க்கையையும், இவ்வுலகம் நெடுகிலும் உள்ள நம்முடைய சக மனிதர்களின் வாழ்க்கையையும் புதிய வழிகளில் பார்ப்பதற்கும், நம்முடைய தனிப்பட்ட மற்றும் கூட்டு மனிதநேயத்தைப் பற்றிய உலகளாவிய உண்மைகளை உணர்ந்து கொள்வதற்கும் ஓர் ஒளிமயமான பாதையைக் காட்டுகிறது. “வெளிச்சத்தை மட்டுமே நாடி, தன்னுடைய பொறுப்புகள் அனைத்தையும் தட்டிக்கழிக்கின்ற ஒருவனால் ஒருபோதும் அகத் தெளிவைப் பெற முடியாது. சூரியன்மீது மட்டுமே தன் கண்களை நிலைப்படுத்துகின்ற ஒருவன் இறுதியில் பார்வையற்றவனாகத்தான் ஆவான்,” என்று பாலோ கொயலோ எழுதுகிறார். சிந்தனையைத் தூண்டும் இக்கதைகள், பேசும் பாம்புகள், மலையேறுகின்ற முதிய பெண்கள், தங்கள் ஆசான்களிடம் கேள்வி கேட்கின்ற சீடர்கள், உரையாடலில் ஈடுபட்டுள்ள புத்தர், மர்மமான துறவிகள், பிரபஞ்சத்தின் மர்மங்களைப் பற்றிப் பேசுகின்ற பல புனிதர்கள் ஆகியோரின் கண்ணோட்டங்களை வழங்குகின்றன. உலக அளவில் மிகச் சிறப்பாக விற்பனையாகியுள்ள அவருடைய பிற படைப்புகளைத் தொடர்ந்து, உத்வேகமூட்டும் இத்தொகுப்பு, ஆன்மிக உண்மைகளைத் தேடிக் கொண்டிருக்கின்ற அனைத்து வயதினரையும் அனைத்துப் பின்புலங்களைச் சேர்ந்தோரையும் பெரிதும் ஈர்க்கும்.
0
out of 5