$4.00
Genre
Print Length
49 pages
Language
Tamil
Publisher
Thirumagal Nilayam
Publication date
1 January 2006
Weight
0.79 pound
என் தம்பி கருணாநிதியைப் பார்த்துவிட்டுத்தான் வருகிறேன். இங்கே பேசியவர்கள் கருணாநிதி தனிமைச் சிறையில் தவிக்கிறார் என்று தவறாகச் சொல்லிவிட்டார்கள். தம்பி கருணாநிதியைத் தனிமைச் சிறையில் தள்ளுமளவுக்கு கொடியவரல்ல பக்தவத்சலம், பாம்பும், பூராணும் நெளிகிற பாழ் சிறையில்தான் கருணாநிதியை பூட்டி வைத்திருக்கிறார்கள். நெஞ்சத்தில் பூட்டி வைக்க முடியாத நிகழ்ச்சி ஒன்றை நினைவுபடுத்துகிறேன். அவரை நான் சந்தித்தபோது என் குடும்பத்தைப் பற்றியோ தன் குடும்பத்தைப் பற்றியோ அவர் விசாரிக்கவில்லை. ''என்ன அண்ணா, தர்மபுரி இடைத்தேர்தல் எப்படி இருக்கிறது, கழகம் வெற்றி பெற்று விடுமா?'' என்ற கேள்விதான். என் தம்பி கருணாநிதி தனிமைச்சிறையில் அடைபட்டுக் கிடக்கும் இந்த இடம் தான் இனி எனக்கு யாத்திரை பூமி.
0
out of 5