Vanniyaacci (வன்னியாச்சி)

By Thamaraiselvi (தாமரைச்செல்வி)

Vanniyaacci (வன்னியாச்சி)

By Thamaraiselvi (தாமரைச்செல்வி)

375.00

MRP ₹393.75 5% off
Shipping calculated at checkout.

Specifications

Genre

Novels & Short Stories

Print Length

336 pages

Language

Tamil

Publisher

Kalachuvadu Publications

Publication date

1 January 2017

ISBN

B07DHKRG4R

Weight

300 Gram

Description

ஈழத்துப் புனைகதைஞர்களில் ஐந்தாம் தலைமுறை எழுத்தாளர்களுள் தாமரைச்செல்வியின் பங்கும் பணியும் மிக முக்கியமானவை.

'சுமைகள்', 'விண்ணில் அல்ல விடிவெள்ளி', 'தாகம், 'வீதியெல்லாம் தோரணங்கள்', 'பச்சை வயல் கனவு' போன்ற கனதிமிக்க நாவல்கள்மூலம் தனக்கென ஓர் அடையாளத்தை இனம்காட்டியிருக்கும் இவர் 'மழைக்கால இரவு', 'அழுவதற்கு நேரமில்லை', 'வன்னியாச்சி' போன்ற சிறுகதைத் தொகுதிகளை ஏலவே அறுவடை செய்து சிறுகதைத்துறையிலும் அதிர்வை ஏற்படுத்தியவர்.

மெய்யனுபவங்களையும் பிறர் வாயிலாகக் கேட்டறிந்தவற்றையும் கலாரீதியாகக் கூறி வாசகரிடையே அவற்றினைத் தொற்றவைப்பதோடு தமிழ்ப்புனைகதை இலக்கியத்தில் முகிழ்விடும் நவீனச் செல்நெறிகள் பற்றிய பிரக்ஞைக்கு உட்பட்டு எழுதுவதும் தாமரைச்செல்வியின் வெற்றிக்கான காரணிகள் எனக் கொள்ளலாம்.

போர்க்காலச் சூழல், போரின் அவலச் சாவுகள். அழிவுகள். பதற்றம் நிறைந்த மனங்கள் ஆகியவற்றைத் தனது படைப்புகளில் யதார்த்தமாகச் சித்தரிப்பதில் தாமரைச்செல்வி தனக்கென ஒரு முத்திரை பதித்தவர். சக்தியற்ற பெண்களின் மௌன உணர்வுகளுக்கு வடிவங்கொடுப்பதில் வல்லமையானவர். இச்சிறுகதைத் தொகுதியும் இவரது திறனுக்குச் சாட்சி சொல்வதாகவே அமைந்திருக்கிறது.

– புலோலியூர் ஆ. இரத்தினவேலோன்


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%