₹110.00
MRPGenre
Print Length
175 pages
Language
Tamil
Publisher
Thirumagal Nilayam
Publication date
1 January 2017
Weight
358 gram
சிலர் பிறக்கும்போதே கையில் பேனாவைப் பிடித்துக் கொண்டு
எழுத்தாளராய்ப் பிறக்கிறார்கள். சிலர் முயற்சி செய்து எழுத்தாளராகிறார்கள்.
இன்னும் சிலர் எழுத்தாளர் உலகிற்குள் கழுத்தைப் பிடித்துத்
தள்ளப்படுகிறார்கள்.
மூன்றாவது கூறிய எழுத்தாளர் வர்க்கத்தைச் சேர்ந்தவன் நான். கொஞ்சங்கூட
எதிர்பாராத விதத்தில் எழுத்தாளன் ஆனவன். இன்றைய தினம் நான் "வாடா மலர்''
பிரசுராலயத்தின் தலைவனாக இருந்து, தமிழ் நாட்டுக்கு இணையில்லாத் தொண்டு
செய்து, தமிழைக் கொன்று வருவதற்குப் பொறுப்பாளி, யார் என்று கேட்டால்,
நிச்சயமாக நான் இல்லை. என் கைக்குள் அகப்படாத சந்தர்ப்பங்களின் மேலேயே
அந்தப் பொறுப்பைச் சுமத்த வேண்டியவனாயிருக்கிறேன். இல்லை யென்றால்,
முதன்முதலாக நான் பேனாவைக் கையில் பிடித்துக் கதை எழுதத் தொடங்கிய வேளையின்
கூறு என்று சொல்ல வேண்டும்.
0
out of 5