₹90.00
MRPPrint Length
184 pages
Language
Tamil
Publisher
Thirumagal Nilayam
Publication date
1 January 2016
Weight
358 gram
இத்தனைக்கும் எனது கதையின் நாயகனான ராமசேஷன் ஒரு வயோதிகப் பிராம்மணர்.
மனைவியை இழந்தவர். ஒரே மகள் தான் அவருக்கு... அவளுக்குத் திருமணம் செய்து
கொடுத்து விட்டு அவளது அரவணைப்பில் வாழ வழியில்லாமல் தனிமையில் அவர்
படும்பாடும் அதை உடைக்க அவர் மகள் செய்யும் யத்தனங்களும் தான் இத்தொடரின்
பிரதான அம்சம்.நமது சமூக அமைப்பில் பெண் என்பவள் திருமணத்திற்கு முன் ஒரு
விதமாகவும், பின்பு ஒரு விதமாகவும் வாழும் ஒரு நிலைப்பாடு உள்ளது.
குறிப்பாகத் திருமணத்திற்குப் பிறகு அல்லது பிறந்த வீடு என்பது அவளுக்குச்
சீர் செய்வதற்கு மட்டும் தான்... மற்றபடி எந்தவிதமான உயிரோட்டமுள்ள
தொடர்புகளும் அவளுக்குக் கிடையாது என்கிற ஒரு நிலைப்பாடு உண்மையில்
மிகக்கொடியது.இந்த வகையில் கேரளம் மிக வேறுபடுகிறது. சொத்திலும் பெண்ணுக்கே
முதல் உரிமை. கர்ம காரியங்களையும் அவளே வாழ்நாள் முழுக்கச் செய்ய வேண்டும்
என்று எதை வைத்து அங்கே மட்டும் அந்த நியாயத்தை நிலை நிறுத்தினார்கள்
என்பது விளங்கவில்லை.ஆணோ பெண்ணோ பந்த பாசங்களும் உணர்வு நிலைகளும்
பொதுவானவையல்லவா? இந்த நியாயங்கள் எவ்வளவு தான் தெரிந்தாலும் இன்னும் பல
குடும்பங்களில் சிடுக்குகளுக்கும் சிக்கல்களுக்கும் பஞ்சமேயில்லை பொருளாதார
ரீதியில் வருமான வரி கட்டும் அளவுக்கு உள்ளவர்கள் இந்த மாதிரி சமூக லௌகீக
வளையங்களில் சிக்கிக்கொள்ளாமல் அதையே தங்கள் பணத்தால் விலைக்கு வாங்கி
விடுகிறார்கள்.
0
out of 5