₹550.00
MRPGenre
Print Length
408 pages
Language
Tamil
Publisher
Ethir Veliyeedu
Publication date
1 January 2024
Weight
481 gram
2021 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்.
ஆப்பிரிக்காவின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் அப்துல்ரஸாக் குர்னா.
ஜெர்மானியக் காலனித்துவத் துருப்புகளான அஸ்கரியால், தன்னுடைய பெற்றோரிடமிருந்து களவாடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட துருதுருப்பான, லட்சியக் கனவுகள்கொண்ட சிறுவன் ஹம்சா, பல வருடங்களுக்குப் பிறகு தன் கிராமத்திற்குத் திரும்பி வருகையில், தன் பெற்றோர் இறந்துபோய்விட்டதையும், தன் ஒரே தங்கை தத்துக் கொடுக்கப்பட்டதையும் அறிந்து அதிர்ச்சியுறுகிறான்.
ஹம்சா களவாடப்படவில்லை, விற்கப்பட்டுவிட்டான். அவன் வளர்ந்து பெரியவனானதும், அவனைத் தன் வலதுகையாக மாற்றி, அதன்மூலம் அவனை மற்றவர்களின் கொடுமைகளில் இருந்து பாதுகாத்த ஒரு ஜெர்மன் அதிகாரியின் நினைவுகளால், வாழ்நாள் முழுவதும் துரத்தி அலைக்கழிக்கப்பட்டான்.
இந்த நூற்றாண்டு தன் இளமைப் பருவத்தில் இருக்கிறது. ஜெர்மனியர்களும், ஆங்கிலேயர்களும், ஃபிரெஞ்சுக்காரர்களும், பெல்ஜியர்களும், இன்னும் பலரும் தாம் விரும்பியவகையில் எல்லாம் வரைபடங்களை வரைந்து, ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, ஆப்பிரிக்காவைப் பிரித்தனர்.
மக்கள்மீது முழு ஆதிக்கம் செலுத்த விரும்பியதால், காலனித்துவ அடக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து நிகழ்த்தும் கிளர்ச்சிகளை அடக்கிக்கொண்டே இருக்கவேண்டிய கட்டாயம், அவர்களுக்கு ஏற்பட்டது. ஐரோப்பாவின் மோதல், கிழக்கு ஆப்பிரிக்காவில் மற்றொரு நிகழ்வை உருவாக்கி, ஒரு மிருகத்தனமான போர் அந்த நிலப்பரப்பை முற்றிலுமாக அழிக்கிறது. போர் தன்னுடைய வாழ்வை எப்படிச் சூறையாடியது என்பதை விளக்க ஹம்சாவிடம் வார்த்தைகளே இல்லை. குழந்தைப் பருவத்தில் தான் வாழ்ந்த தன்னுடைய சொந்த ஊருக்குத் திரும்புகையில், அவனுக்கு அங்கு தேவைப்படுவதெல்லாம் மிகச் சிறிய ஒரு வேலை, பாதுகாப்பு, அத்துடன் அழகான அஃபியா.
ஏதோவொரு வகையில் வாழ்வில் இணைந்துவிட்ட நண்பர்களும், உயிர் தப்பிப் பிழைத்தவர்களும், சேர்ந்தும், பிரிந்தும், உழைத்தும், காதல் வயப்பட்டுக் கொண்டுமிருக்கையில், இவை அனைத்தையும் எதிர்பாராதவிதத்தில் பறித்து, பிரித்துவைக்கக் காத்திருக்கிறது, மற்றொரு புதிய போரின் நீண்ட, கரிய நிழல்.
0
out of 5