₹216.00
MRPGenre
Print Length
144 pages
Language
Tamil
Publisher
Kalachuvadu Publications
Publication date
1 January 2021
ISBN
9789355230836
Weight
110 gram
சமகாலத்துப் படைப்பாளிகளில் வாசகனுக்கு நிறைவளிக்கும் மிகச்சில எழுத்தாளர்களுள் கார்த்திக் பாலசுப்ரமணியனும் ஒருவர். இவரின் கதைகளில் ஒரே வகையான களத்தையோ சித்திரிப்பையோ காண இயலாது. இவர் புதிய அழகியல் அம்சங்களுக்காககவோ வெறும் படிமங்களுக்காகவோ அல்லது மிகை புனைவுக்காகவோ முனைந்துபார்க்கும் எல்லைக்கு வெளியே அமர்ந்திருக்கிறார். யதார்த்தச் சித்திரிப்புகளின் மூலம் நித்திய மதிப்புமிக்க கதைகளை எழுதவல்லவராக மிளிர்கிறார். மிக எளிமையானதொரு கதைக்களத்தில் ஊடுருவித் துல்லியமான படைப்பை மொழிக்குக் கையளித்து விடுகிறார்.
தனது கதையுலகின் அலங்காரமற்ற நேரடித்தன்மையையும், படைப்பின் மொத்த ஆகிருதியை வாசகனுக்கு ஊட்டிவிடத் துடிக்காத நுட்பத்தையும், பொறுமையையும் மகத்துவமான எழுத்தாளர் அசோகமித்திரனிடம் இருந்தே கார்த்திக் பாலசுப்ரமணியன் பெற்றுக்கொள்கிறார் எனக்கருதுகிறேன். ‘ஒளிரும் பச்சைக் கண்கள்’ புத்தாற்றலும் உத்வேகமும் கொண்டதொரு தலைமுறையின் அர்த்தபூர்வமானதம அடர்த்திமிக்கதுமான பிரதி. மொழியும் படைப்பாளனும் பிரகாசிக்கட்டும்!
0
out of 5