₹468.00
MRPGenre
Print Length
344 pages
Language
Tamil
Publisher
Kalachuvadu Publications
Publication date
1 January 2023
ISBN
9789355232434
Weight
180 gram
பொதுமுடக்கம் என்னும் தற்காலிக நிகழ்வைப் பின்புலமாகக் கொண்ட இந்த நாவல்
மனித வாழ்வின் நிரந்தரமான சில பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறது. நாவலில்
இரண்டு பயணங்கள் வருகின்றன. ஒன்று சாலைகளினூடே மேற்கொள்ளும் புறப்
பயணம். இன்னொன்று வாழ்வினூடே மேற்கொள்ளும் அகப் பயணம். நாவலின்
கதையாடலில் இரண்டும் ஒன்றையொன்று பாதித்தபடி இணைகோடுகளாகப்
பயணிக்கின்றன.
காதல் பற்றிய விழுமியங்களை யதார்த்த வாழ்வின் தவிர்க்க முடியாத இயல்புகளின்
பின்புலத்தில் வைத்துப் பரிசீலிக்கிறது இந்த நாவல். ஆணுக்கும் பெண்ணுக்கும்
இடையே எழும் இயல்பான ஈர்ப்புக்கு நடுவே நுழைய யத்தனிக்கும் பல்வேறு
கூறுகளின் பின்னணியில் காதலின் இயல்பையும் அதன் உருமாற்றங்களையும்
அதனால் ஏற்படும் வலிகளையும் இந்த நாவல் மிக நெருக்கமாக அணுகிப் பார்க்கிறது.
விழுமியங்களால் கட்டுப்படுத்திவிட முடியாத காதலின் வலிமையை உணர்த்துகிறது.
வாழ்வுக்காக விழுமியங்களா, விழுமியங்களுக்காக வாழ்க்கையா என்னும்
காலாவதியாகாத கேள்வியை அழுத்தமாக எழுப்புகிறது.
இன்றைய தலைமுறை இளைஞனின் கோணத்தில் விரியும் நாவல், நேற்றைய
தலைமுறைகளின் பார்வைகளையும் உரிய முறையில் உள்ளடக்கியிருக்கிறது.
0
out of 5