₹240.00
MRPGenre
Print Length
160 pages
Language
Tamil
Publisher
Kalachuvadu Publications
Publication date
1 January 2022
ISBN
9789355232823
Weight
180 gram
மரபார்ந்த கதைக்களன்களிலிருந்து மாறுபட்டுச் செல்கின்றன லாவண்யாவின் சிறுகதைகள். தகவல் தொழில்நுட்பத் துறையில் பெண்களின் இருப்பு, அவர்களின் பிரத்யேகமான பிரச்சினைகள், துறை சார்ந்த நெருக்கடிகள், குடும்ப - சக பணியாளர்களுடனான உறவுகளில் ஏற்படும் மாற்றங்கள், விரிசல்கள், உறவுச் சிக்கல்கள் ஆகியவற்றை இவரின் சிறுகதைகள் கவனப்படுத்துகின்றன.
இவை பெண்களின் கதைகள் மட்டுமன்று. ஆண்களின் பிரச்சினைகளும் அவை அவர்களைச் சிதைக்கும் வழிவகைகளையும் ஆராய முயலும் கதைகள். பெண்ணின் நோக்கிலிருந்து சொல்லப்படாததே இந்தக் கதைகளின் முக்கிய அம்சம்.
தகவல் தொழில்நுட்ப உலகில் கணினி மொழியாகவும் மென்பொருளாகாவுகம் எண்களாகவும் குறிப்பான்களாகவும் இயந்திரமாகவும் உருமாறி வருபவர்களின் மனிதக் கணங்களை மையமிட்டு, நுண்சித்தரிப்புகள் மூலம் வாசக மனத்திற்குள் அக்கணங்களின் அதிர்வை உருவாக்கிக் காட்டுவது லாவண்யாவின் கதைமொழி.
அமைப்புகளின் வன்முறை, அதிலிருந்து மீளத் தடுமாறும் மனிதர்கள் எனப் புனைவுலகின் எல்லைகளை இக்கதைகள் விரிவுபடுத்துகின்றன.
புதிய களம், புதிய வாசிப்பனுபவம்.
0
out of 5