₹228.00
MRPGenre
Print Length
152 pages
Language
Tamil
Publisher
Kalachuvadu Publications
Publication date
1 January 2010
ISBN
9789380240138
Weight
110 gram
தமிழ் அறிவுலகில் செஞ்சுடராகப் பிரகாசித்துப் பண்பாட்டுத் தளத்தில் சாதி, மதம், நாட்டார் வழக்காறுகள், ஆய்வுகள் எனப் பல துறைகளில் புதிய திறப்புகளை ஏற்படுத்திய அமரர் தோழர் நா. வானமாமலையின் தலைமை மாணக்கராக நம்மிடையில் வாழ்ந்து வழிகாட்டிவருபவர் பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன். நடந்து நடந்து புழுதியேறிய அவர் கால்கள் கொண்டுவந்து சேர்த்திருக்கும் அடித்தள மக்களின் வரலாறும் பண்பாட்டு அடையாளப் போராட்டங்கள் பற்றிய தரவுகளும் கொலையில் உதித்த தெய்வங்களின் கதைகளும் நம் பார்வைகளைக் கூர்மைப்படுத்தி விசாலமாக்கும் பதிவுகளாகும்.
கிறித்தவம், தமிழ் மண்ணுக்குக் கொண்டுவந்தது பைபிளும் சிலுவையும் தேம்பாவணியும் மட்டுமல்ல. தமிழ்க் கிறித்தவத்தின் வரலாற்று அடுக்குகளை ஊடறுத்துச் செல்லும் பயணமாக வரும் இக்கட்டுரைகளின் தொகுப்பு அவரது அயரா உழைப்பில் உதித்த ஞானசேகரமாகும்.
0
out of 5