₹150.00
MRPGenre
Print Length
176 pages
Language
Tamil
Publisher
Kalachuvadu Publications
Publication date
1 January 2011
ISBN
9789380240985
Weight
180 gram
தமிழ் இலக்கியப் பரப்பில் அதிகம் இடம்பெறாத ஒரு களத்தை எடுத்துக்கொண்டு அதிகம் பேசப்படாத விஷயங்களைப் பேச முனைவதும் பூசி மெழுகாமல் அவற்றைக் கையாள்வதும் இந்த நாவலின் சிறப்புக்கள். பொறியியல் கல்லூரி மாணவர் விடுதியின் பின்புலத்தில் மண்டல் கமிஷன் அமலாக்கம், ராமர் கோவில் பிரச்சார இயக்கம் ஆகியவற்றால் மாணவர் சமுதாயத்தில் ஏற்படும் கொந்தளிப்புகள் அழுத்தமாகப் பதிவாகின்றன. இட ஒதுக்கீடு என்னும் கோட்டின் இரு புறமும் நிற்கும் மாணவர்களின் உணர்ச்சிகளும் போக்குகளும் பக்கச் சார்பு இல்லாமல் வெளிப்படுத்தப்படுகின்றன.
மாணவர் விடுதி என்னும் பின்புலம் இவ்வளவு துல்லியமாகத் தமிழ்ப் புனைகதைப் பரப்பில் பதிவானதில்லை. மண்டல், கோவில் சார்ந்த சலனங்களுடன் ராகிங் என்னும் அம்சமும் நாவலில் கையாளப்படுகிறது. இவை அனைத்தும் புனைவம்சத்துடனும் தேவையான மௌனங்களுடனும் வெளிப்படுவது நாவலின் கலைப் பெறுமானத்தைக் கூட்டுகிறது.
0
out of 5