₹108.00
MRPGenre
Print Length
96 pages
Language
Tamil
Publisher
Kalachuvadu Publications
Publication date
1 January 2014
ISBN
9789382033585
Weight
110 gram
சூழ்நிலைகளின் பரபரப்புகளில் ஆவேசங்கொள்ளாமல் கவிஞனாயிருத்தல் தனித்த சுபாவம். கவிஞனாயிருப்பதற்கும் கவிதையெழுதுகிறவனாயிருப்பதற்கும் இடைப்பட்ட வேறுபாடு இது. ஜி.எஸ்.தயாளன் 'கவிஞனாயிருத்தல்' வாய்க்கப் பெற்றவர். அதுவே அவரும், அவரைப் போலவே அவரது கவிதைகளும் பெற்றிருக்கும் அழகு. ஏராளமானவர்கள் எழுதும் கவிதைகளுக்கிடையில், எளிமையான இவரது கவிதைகள்; சலனமும் நிச்சலனமும் கொண்ட கவிஞனால் உருப்பெற்றவை. சலனமுறும் வாழ்வை நிச்சலனத்தால் வரைந்து பார்ப்பவை.
இயலாமை, துக்கம், போராட்டம் இவற்றிற்கிடையில் வாழ்தலுக்கான நம்பிக்கையை வலுப்பவை.
வாழ்தலை லெகுப்படுத்திக்கொள்ளப் பிரயத்தனப்படுபவை.
லெகுப்படுத்திக்கொள்ள இயலாமற்போகிற பட்சத்திலும்கூட. . .
வந்து செல்பவர்களுக்கு மத்தியில் தொடர்ந்து செயல்படும் ஜி.எஸ்.தயாளனை நிலைபேறு கொள்ளச்செய்யும் குணம் இதுதான். இந்த வேளிமலைப் பாணனுக்கு வாழ்தலே லட்சியம்.
கவிதை அதன் சாரம்.
லக்ஷ்மி மணிவண்ணன்
0
out of 5