₹330.00
MRPGenre
Print Length
312 pages
Language
Tamil
Publisher
Kalachuvadu Publications
Publication date
1 January 2014
ISBN
9789384641139
Weight
180 gram
மொழியின் பல்வேறு பரிமாணம் சார்ந்த படைப்புக்கள் பிற இந்திய மொழிகளின் வெகுசன ஊடகங்களில் தமிழைப் போல் இடம்பெற்றதில்லை. தமிழ் இலக்கண, இலக்கியச் சிந்தனைகளுக்கு அப்பால் சமூக அரசியல் விழுமியங்கள் தமிழ் மொழியில் வற்புறுத்திய நவீனமயமாக்கம் சார்ந்த எழுத்துக்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க - ஐரோப்பிய முலாம்பூசி இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகளில் தமிழகத்தில் அறிமுகமான மொழியியல், தமிழுக்கான ஆய்வுத்தளத்தை நிறுவிக் கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைகளாகிவிட்டன. இருப்பினும் மொழியியல் ஒரு துறைப் படிப்பாக அங்கீகாரம் பெற மொழிப் பழமைவாதங்கள் வேகத்தடைகளாக இருந்துவருவது துரதிருஷ்டவசமானது.
இத்தொகுப்பில் இருபது ஆண்டுகளாக வெளிவந்துள்ள கட்டுரைகள், நேர்காணல்கள், மதிப்புரைகள், விவாதங்கள் அனைத்தும் ‘காலச்சுவடு’ வாசகனின் மொழிப் புலனறிவியல் சலனத்தை ஏற்படுத்தியுள்ளன. இவற்றின் மூலம் ஒவ்வொரு வாசகனும் பெற்றுள்ள மொழியியல் குறிப்பாக, மொழி நவீனமயமாக்கம் குறித்த செயலறிவு மொழியியலின் மீது நேரிய மனப்பாங்கை வளர்த்துள்ளது ‘காலச்சுவ’டின் பெரும் பங்களிப்பாகும்.
சு. இராசாராம்
0
out of 5