Meenum Panpaadum (மீனும் பண் பாடும்)

By Halldor Laxness (ஹால்டார் லேக்ஸ்நஸ்)

Meenum Panpaadum (மீனும் பண் பாடும்)

By Halldor Laxness (ஹால்டார் லேக்ஸ்நஸ்)

510.00

MRP ₹535.5 5% off
Shipping calculated at checkout.

Specifications

Genre

Fiction

Print Length

336 pages

Language

Tamil

Publisher

Kalachuvadu Publications

Publication date

1 January 2017

ISBN

9789386820228

Weight

180 gram

Description

ஐஸ்லாந்து நாட்டின் கடலோரக் கிராமம் ஒன்றில் தற்செயலாகப் பிறக்க நேர்ந்த, தாய் தந்தையரை அறியாத அல்ஃப்க்ரைமுரின் இளமைக்கால மனப்பதிவுகளினூடாக விரிகிறது இந்த நாவல். அவன் வளரும் ப்ரெக்குகாட் இல்லம் விசித்திர மனிதர்களின் வாழ்விடம். தனது தாத்தாவாக வரித்துக்கொண்ட ப்யோர்னைப் போலவே தானும் ஒரு செம்படவனாக வேண்டும் என்று அல்ஃப்க்ரைமுர் விரும்புகிறான். ஆனால் வாழ்க்கை அவனுக்கு வேறொன்றை விதித்திருக்கிறது. புகழ்பெற்ற பாடகராக அறியப்படும் கர்தர் ஹோமின் வருகையும் அவருடனான சந்திப்பும் அவனது வாழ்க்கைத் தடத்தை மாற்றுகிறது. முற்றிலும் ஒரு புதிய அத்தியாயத்திற்காக அந்தக் கடற்கரைக் கிராமத்திடமிருந்து விடைபெற்றுச் செல்கிறான் அல்ஃப்க்ரைமுர்.
வெளியுலகின் சலனங்களையும் காலத்தின் நகர்வையும் பிடிவாதமாக மறுத்து, தாங்களே வகுத்துக்கொண்ட மதிப்பீடுகளின் வழி எளிய தேவைகளுடன் வாழ முயலும் பாசாங்கற்ற மனிதர்கள்தான் இந் நாவலின் மையப் பாத்திரங்கள். பாடகர் கர்தர் ஹோம் இறுதி வரையிலும் அவிழ்க்கப்படாத புதிர். நவீன வாழ்வின் வெற்றுப்பகட்டு, பேராசை இவற்றின் மீதான விமர்சனம் இந்நாவலில் உள்ளீடாகத் துலங்குகிறது. அற்புதக் கதைகளின் எளிமையும் ஈர்ப்பும், நாட்டார் கதைகளின் நகைச்சுவையும் கொண்ட இந்நாவலை தமிழ் வாசகர்கள் மிக நெருக்கமானதாக உணர்வார்கள்.


Ratings & Reviews

0

out of 5

  • 5 Star
    0%
  • 4 Star
    0%
  • 3 Star
    0%
  • 2 Star
    0%
  • 1 Star
    0%