By Jeyant Kaikini, Translator: K. Nallathambi (ஜயந்த் காய்கிணி, கே. நல்லதம்பி)
By Jeyant Kaikini, Translator: K. Nallathambi (ஜயந்த் காய்கிணி, கே. நல்லதம்பி)
₹180.00
MRPGenre
Print Length
136 pages
Language
Tamil
Publisher
Kalachuvadu Publications
Publication date
1 January 2019
ISBN
9789389820140
Weight
110 gram
மனித முரண்பாடுகளை உள்வாங்கிக்கொள்வதில் ஜயந்த் காய்கிணியின் பார்வை மாறுபட்டது. சிறிய ஊரிலிருந்து வந்தவரானாலும், ஜயந்த் நகர வாழ்க்கையைப் பார்க்கும் பார்வை கன்னடத்திற்குப் புதியது. கதைகளில் அவருடைய ஈடுபாடு, ஓட்டத்தின் லயம், எழும் துடிப்பு, எல்லாம் அவருக்கே உரித்தானவை. படிக்கவேண்டும் என்று தூண்டும் அதிசய ஈர்ப்புள்ள எழுத்தாளர் ஜயந்த்.
- கிரீஷ் கார்னாட்
புதிய களங்கள், புதிய மாந்தர்கள் என எல்லா வகைகளிலும் புதியவற்றை நாடிச் செல்லும் விழைவுடையவர் ஜயந்த் காய்கிணி. கூடுவிட்டுக் கூடு பாய்வது போல ஒவ்வொரு கதையிலும் இவருடைய களங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. எவ்விதமான முன்திட்டமும் இல்லாமல் எழும் இவருடைய கதைகள் மிகவும் இயல்பாகப் புதிய சூழல்களுடன் பொருந்திவிடுகின்றன. சாதாரணமாக ஒன்றையடுத்து ஒன்றாக நிகழ்ச்சிகளை அடுக்கிக்கொண்டு போகிற போக்கில் எங்கோ ஒரு கணத்தில் வாழ்க்கையை மதிப்பிடும் ஒரு சொல் அல்லது ஒரு வரி அல்லது ஒரு காட்சி மிகவும் இயல்பான வகையில் அமைந்திருப்பதை வாசகர்கள் உணரமுடியும். அத்தகு கணங்கள் கதையின் வாசிப்பனுபவத்தைப் பல மடங்காகப் பெருக்கி மனத்தை நிறைக்கின்றன.
- பாவண்ணன்
0
out of 5