₹264.00
MRPGenre
Print Length
168 pages
Language
Tamil
Publisher
Kalachuvadu Publications
Publication date
1 January 2019
ISBN
9789389820232
Weight
180 gram
இழவு வீட்டிலே இந்த ஆட்டகாரர்களை இளந்தாரிகள் படுத்துகிற பாட்டைப் பார்த்திருக்கிறேன்; உள்ளூர அழுதிருக்கிறேன். ஆனால், அவர்களில் ஒருவனாக நானிருந்தால் எப்படியிருக்கும் என்று எண்ணிப் பார்த்ததில்லை. பெருமாள் என்னைப் போலப் பார்வையாளர் அல்ல. சம்பந்தப்பட்டவர். அந்த வலியை அனுபவித்தவர். அந்த ‘மட்டை வேலை’ பற்றி அவர் சொல்லி வரும்போது, இதைச் சொல்ல அவரால்தான் முடியும் என்றுபட்டது.
அருணன்
தான் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதப் போவதாகப் பஞ்சாபி எழுத்தாளர் அம்ரிதா ப்ரீதம், மற்றொரு புகழ்பெற்ற எழுத்தாளரான குஷ்வந்த் சிங்கிடம் ஒருமுறை கூறியபோது, “உன்னுடைய வாழ்க்கையில் பெரிதாக என்ன இருக்கிறது எழுதுவதற்கு? அதனை ஒரு ரெவின்யூ ஸ்டாம்பின் பின்பக்கத்தியே எழுதி விடலாமே” என்று நகைச்சுவையாகச் சொன்னாராம். ‘ரெவின்யூ ஸ்டாம்ப்’ என்ற தலைப்பிலேயே பின்னர் தனது வாழ்க்கை வரலாற்றை அம்ரிதா ப்ரீதம் எழுதினார் என்பது வரலாறு.
ஆ. தனஞ்ஜெயன்
0
out of 5